நானே வக்கீல் நானே நீதிபதி (5)
ஷரியத்தில் தண்டனையும் நிறைவேற்றும் பொருப்பும்:
~ ஷரீயத் பெரும்பாலான வரம்புமீறல் விசங்களில் இவ்வாறுதான் தண்டனை தரப்படல் வேண்டும் என்கிற முறையை விளக்கமாக கூறாமல் அரசின் முடிவிற்க்கே விட்டு விடுகீறது. என்றாலும் கொலை, திருட்டு,வழிப்பறி, பிறர்மனை நயத்தல், விபச்சாரம், கள்ளுண்ணல்,போன்ற சில குறிப்பிட்ட சட்ட மீறல் குற்றங்களுக்குத் தெளிவான தண்டனைகளை வகுத்துள்ளது.
~ இத்தகு குற்றங்களுக்கு தரப்படும் குறிப்பிட்ட தண்டனைகளுக்கு "ஹுதூத்"(குற்றவியல் தண்டனை) என்று பெயர். ஷரியத்தில் விளக்கமாகக் கூறப்படாத தண்டனைகளுக்கு "தஃஜீர்" என்று பெயர்.
~ வெறுப்பு, தீராப்பகை, மற்றும் புறம் பேசுதல், போன்ற பிடிக்குல் அடங்கா தீயொழுக்கத்தை எதிர்க்கிறது, எச்சரிக்கையும் விடூக்கிறது. ஆனால் இத்தீயொழுக்கங்கள் எல்லாம் பகிரங்கமாக வெளியே தெரியும்படி புறச்செயல்களாக உருவெடுத்தால் ஒழிய இவை சட்டத்தின்
பிடிக்குள் அகப்படுவதில்லை.
~ சட்டத்தை அமல்படுத்தும் பிரதிநிதியாகபோலீஸ், நீதி மன்றம், சிறைச்சாலைபேன்ற அமைப்புகளை ஷரியத் நம்பவில்லை.
மாறாக, இறைவன் எந்த நேரமும் தம்மைப் பார்த்துக் கொண்டிறுக்கிறான் ,தன்னுல்லே
எந்த நேரமும் இருந்து தான் கூறும் சொற்களையும், செய்யும் செயள்களையும்
ஏட்டிலே பதிந்து கொண்டிருக்கிறார்கள்,
மறுமையிள் கேள்வி கணக்கிற்காக இறைவனின் முன்னே எல்லோரும் நிறுத்தப்படுவர் என்ற இறை நம்பிக்கைதான் மூஸ்லீம் சமுதாயத்தை
ஷரீயத் சட்டப்படி வாழ வகை செய்யும் மிக முக்கிய காரனிகளாகும்.
Ref: Prof.M.A .Rawuf. ஷரீஅத் மலர் 1993.
Comments
Post a Comment