யாரிடம் புகார் அளிப்பது???
தலைப்பு: பெரியகுளத்தில் கிலாபத் – நிர்வாகக் குழுக்கள் அதிகார மையமாக மாற வேண்டியதன் அவசியம் அனுப்புநர்: ஹாஜி. S. முஹம்மது (9345562420), பங்களாபட்டி ரோடு, வடகரை, பெரியகுளம், தேனி மாவட்டம். பெறுநர்: தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஸ்டேட் பாங்க் காலனி மக்கா பள்ளி ஜமாத், பெரியகுளம். பார்வை: 24/10/2025 அன்று நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம். மதிப்பிற்குரிய ஜமாத் நிர்வாகத்தினருக்கு, பொருள்: தலைமை இமாம் மற்றும் நிர்வாக நடைமுறை குறித்த புகார் மற்றும் விளக்கம் கோருதல் - சார்பாக. 1. புகார் அளிக்கும் முறை குறித்த கேள்வி: பெரியகுளம் ஸ்டேட் பாங்க் காலனி மக்கா பள்ளி ஜமாத் தலைவராகவும், தலைமை இமாமாகவும் பொறுப்பு வகிக்கும் மரியாதைக்குரிய அப்துல் ரஹ்மான் ஹஜரத் அவர்கள் மீது, ஒரு தனிநபர் என்கிற முறையில் நான் ஒரு புகார் மனுவை அளிக்க வேண்டியுள்ளது. ஒரு ஜமாத்தின் தலைவரே புகாருக்கு உள்ளாகும் நிலையில், அந்த மனுவை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்? அதற்கான நடுநிலையான விசாரணை அமைப்பு ஜமாத்தில் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். 2. புகாருக்கான பின்னணி: கடந்த 24/10/...