நானே வக்கீல் நானே நீதிபதி (11)

நீதியை, சட்டத்தை நிலைநாட்டும் கடமை யார் மீது சுமத்தப்பட்டுள்ளது ?

ஷரீஅத்:

நீதி வழங்குதென்பதோ, அறத்தின்பால் நடப்பதென்பதோ ஒருசிலருக்கு மட்டுமின்றி ஓவ்வொருவருக்குமே கடமையாகிவிடுகிறது. திருக்குரானில் (4:135) இதுபற்றி ஆழமாகவும், அழுத்தமாகவும் அதிக விளக்கமில்லாமலேயே புறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.

பணக்காரன், ஏழை ஆகிய இருவரையுமே மிக நன்றாக பாதுகாப்பவன் இறைவன். ஆதலினால் பணக்காரனின் ஆதரவை எதிர்பார்த்தோ ஏழையிடம் காட்டும் பரிவின் காரனமாகவோ மனிதன் நியாயம் தவிறக் கூடாது. (நீதிபதி.M.M.இஸ்மாயில்)

பொது மக்கள் கருத்து என்ற சக்தியையோ, சட்டத்தை அமல்படுத்தும் பிரதிநிதியாக போலீஸ்,
நீதிமன்றம்,சிறைச்சாலை, போன்ற அமைப்புகளையோ ஷரீஅத் நம்பியிருக்கவில்லை. மாறாக, இறைவன் எந்த நேரமும் தம்மை பார்த்து கொண்டிருக்கிறான் என்ற விழிப்புணர்வும் தன்னுள்ளே எந்த நேரமும் இருந்து தான் கூறும் சொற்களையும்,செய்யும் செயள்களையும் ஏட்டிலே வானவர்கள் பதிந்துகொண்டிருக்கிறார்கள்,மறுமையில் கேள்வி கணக்கிற்காக இறைவன் முன் நிருத்தப்படுவேன் என்ற நம்பிக்கைதான் ஒரு இஸ்லாமியனை ஷரீஅத் சட்டத்தின் படி இணங்கி வாழ வகை செய்யும் மிக முக்கிய காரணியாகும். (Prof.M.A.Ravuff.International Islamic University. Malaysia)

இந்திய அரசியள் சட்டம் IPC 19:

எந்த ஓரு இந்திய குடிமகனுக்கும் அல்லது ஓரு குழுவிற்கும், சிவில் மற்றும் கிரிமினல் விவகாரங்களில் தீர விசாரித்து தீர்ப்பளிக்க IPC 19 சட்டரீதியான அதிகாரமும் அனுமதியும் கொடுக்கிறது

Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.