வழக்கு – 2. பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு.

5/2/2011.

பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாஅத்தார்க்கும் நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு.

அல்லாஹ்வின் திருநாமத்தால்...

நேற்று வடகரை ஜமாத்தில் மேற்கண்ட போஸ்டர் விளம்பரம் சம்பந்தமாக  வடகரை காவல்துறை முன்பு பெரிய ஆர்பாட்டமும் அதனை தொடர்ந்து இரவு இஷா தொழுகைக்கு பின் விவாதமும் நடைபெற்றது...

நாம் விடை காணவேண்டிய கேள்வி...?

இந்த வலைப்பூ வெளியீடு செய்வதன்மூலம் எதை சாதிக்க விரும்புகிறோம் ?

எது உண்மை ? எது பொய் ...? இந்த வழக்கின் சாரம்சம் என்ன ? என்று ஆராய்ச்சி செய்வதைவிட,

- இந்த இரன்டு பெரியமனிதர்களின் போர்காண மூலகாரணம் என்ன ?
 - பிரச்சனைக்கு எப்படி முற்றுபுள்ளி வைப்பது ?
மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய முதற்கட்டமாக பெரியகுளத்தில்வாழும்  100 இஸ்லாமியர்களிடம் ஒரு சர்வே செய்வோம்.

9/2/2011
சர்வே முடிவு
S.K.K.இப்ராகிம், Ex.M.L.A., K.M.M.மேத்தா ஆகிய இருவருக்குமிடையிள் நடத்து கொணடிருக்கும் கருத்து யுத்தம் சமுதாய பிரச்சினையாக சாயம் பூசபட்டுள்ளது .

இந்த இரண்டு நபர்கள் உயிருடன் இருக்கும்வரை பிரச்சனைகள் தொடர்கதையாக இருக்கும்.

 மேத்தர் தலைவர் பதவியில் தொடரும்வரை பிரச்சனைகள் தொடரும். மேத்தர் பதவியை விட்டுவிட தயாரானால் மேத்தரின் மருமகணாகிய S.K.K.இப்ராகிம் பிரச்சனை செய்வதை நிறுத்துவதுடன் ஜமாத்தார் முடிவுக்கு கட்டுபடுவார்.

இவைகள்தான் பெரும்பாலான பெரியகுளம் ஜமாதார்களின் கருத்து

 
10/2/2011
வழக்கு ஒரு முடிவுக்கு வந்துவிடும்போல் தோன்றுகிறது.

தேனி மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் பொன்ராஜ் கொந்தாலம் அவர்கள் முன்னிலையில் வரும் 12/2/2011 சனிக்கிழமை காலை 10 மணியளவில் ஒரு பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஏறத்தாழ 15 ஆண்டு போராட்டம்,பலவிதமான சமாதான முயற்சிகளின் தோல்வி...

எந்த முறையில்,என்ன முடிவுகள் ஏற்படும் என்பதை ஆராய்ந்து வலைப்பூவில் வெளியீடுவோம். 


11/2/2011

நாளை பஞ்சாயத்தில் நல்ல முடிவு ஏற்படும் என துவா செய்வோம்...ஒருவேலை....ஒரு வாதத்திற்காக...வேறுவிதமாக யோசித்துப் பார்ப்போம்.


யாராவது ஒருவர் அல்லது ஒரு கோஷ்டியினர் சமரச முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தால் இந்த தேனி மாவட்ட ஜமாஅத்தின் முடிவு எப்படி இருக்கும். ?

-     வழக்கம்போல் முயற்சி தோல்வி என்று ஒதுங்கிக்கொள்ளுமா ? அமைதிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் குழுவினர்மீது எதாவது மேல்நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுமா ?

ஒருவர் அல்லது ஒரு குழுவினர் அல்லாஹ்வின் பாதைக்கும்,சட்டடதிற்க்கும் மாற்றமாக செயல்படுகின்றனர் என்பது தெள்ளதெலிவாக தெரிஞ்சாலும் தேனி மாவட்ட ஜமாஅத்திற்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன உரிமை அல்லது அதிகாரம் இருக்கிறது ? ஒரு குழுவினர் பக்கம் ஜமாஅத் ஒருதலைப் பச்சமாக சாய்ந்து விட்டனர் என்று சாயம் பூசவும் வாய்ப்பு உள்ளதே..!


இந்த பிரச்சனைக்கு மாற்று யோசனைதான் இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம்    [பார்க்க கட்டுரை] 

ஒவ்வொரு மஹல்லாஹ்விழும் தேர்தெடுக்கபட்ட ஒரு நீதிமன்ற குழு இருக்கும். ஆய்வு கட்டுரையில் கூறிய விதத்தில் விசாரணை மேற்கொண்டு "கண்டறியப்பட்ட உண்மை அறிக்கை"
 என்ற தமது அறிக்கையை அரசுக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் சமர்ப்பிக்கும்.

மேற்கண்ட அறிக்கை பாதை தவறியவர்களை நேரிய பாதைக்கு கொண்டுவரும். சமாதானம் கிடைக்கும்.



12/2/2011.

தேனி மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்,மற்றும் பெரியகுளத்தை சார்ந்த சில பெரியோர்களின்
முயற்சியால் வழக்கை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தின் முதற்கட்டமாக இன்று நடந்த கூட்டத்தில் கிழ்கண்ட முடிவு எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இருவரிடமும் சம்மத கையப்பம் வாங்கியாகிவிட்டது.

 ஒன்பது பேர் கொண்டகமிட்டி அமைக்கப்பட்டு,இந்த கமிட்டி எடுக்கும் முடிவிற்கு அல்லது கூறும் தீர்ப்புக்கு இரன்டு நபர்களும் கட்டுப்பட வேண்டும்

திரும்பவும் நேற்று வந்த அதே கேள்விகள்தான் நம்முன் நிற்கிறது.

ஒருவர் அல்லது ஒரு குழுவினர் அல்லாஹ்வின் பாதைக்கும்,சட்டத்திற்க்கும் மாற்றமாக செயல்படுள்ளனர் என்பது ஆவனரீதியாக தெள்ளதெலிவாக தெரிஞ்சாலும் தேனி மாவட்ட ஜமாஅத்தாரால் நியமிக்கப்பட்ட இந்த கமிட்டிக்கு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க என்ன உரிமை அல்லது அதிகாரம் இருக்கிறது?

அல்லது

யாராவது ஒருவர் அல்லது ஒரு கோஷ்டியினர்  கமிட்டி எடுத்த முடிவை ஏற்றுகொள்ள மறுத்தால் கமிட்டியின் நிலைப்பாடு என்ன? அடுத்தகட்ட நடவடிக்கை, முடிவு எப்படி இருக்கும். ?

மீண்டும் சந்திப்போம்


17/2/2011
பெரியகுளம் S.K.K இப்ராகிம்-Ex.M.L.A., K.M.M.மேத்தர்-வழக்கைதீர்க்க அமைக்கப்பட்டுள்ள ஒன்பது பேர் கொண்டகமிட்டிக்கு ஒர் வேண்டுகோள்.



அனுப்புனர் :
ஹாஜி.எஸ்.முஹம்மது
1/277,தாய் காலனி,[SBI  காலனி], பெரியகுளம்

பெருநர்        :
ஜனாப்,K.K.D.பொன்ராஜ்கொந்தாளம்,பொதுச்செயலாளர்,
தேனிமாவட்டஐக்கியஜமாத்,புதுபள்ளிவாசல்,தேனி. 9360653319

ஜனாப்,ஹாஜி.அபுதாஹிர்,தலைவர்,பெரியகுளம் டவுன் தலைமை மஹல்லாஹ்,தென்கரை ஜாமியா பள்ளிவாசல்,பெரியகுளம்,
தகவலுக்காக:
ஜனாப்.கவிக்கோ.Dr.அப்துல் ரஹ்மான்,
மாண்புமிகு சேர்மன்,தமிழ்நாடு வக்பு வாரியம்,
No.24,ஷிவார்டு முதல் தெரு
வால்மீகி நகர்,திருவான்மியூர்
சென்னை -41. Cell:9443813213. மற்றும்.,

சமுதாய பெரியார்கள்.

 பொருள்:
அரசும் இஸ்லாமும் அங்கீகரிக்கதக்க பிணக்குகளை   தீர்த்துவைக்கும் / நீதிவழங்கும் ஓர் இஸ்லாமிய அமைப்பை உருவாக்க ஆரோக்கியமான பொது விவாதத்தை தொடங்குவது சம்பந்தமான ஆய்வு கட்டுரை மற்றும் கட்டுரையில் கண்ட வழிமுறையை பரிசோதிக்க எனக்கும் சகாபுதீன் என்ற நபருக்கும் நடக்கும் வழக்கையே எடுத்துகொள்ளுமாறு 17/10/2009.அன்று தேனிமாவட்ட ஐக்கியஜமாத் தலைவரிடமும் 2/10/2010 அன்று.பெரியகுளம் டவுன் தலைமை மஹல்லாஹ் தலைவரிடமும் கொடுத்த மனுவை திரும்பவும் சமர்பிப்பது - சம்பந்தமாக..


பெரியகுளம் S.K.K. இப்ராகிம் மற்றும் வடகரை ஜமாத்தார்க்கும் [Ex.M.L.A., K.M.M.மேத்தர்] நீண்டகாலமாக நடக்கும் பொது சொத்து சம்பந்தமான வழக்கு மாற்று சமுதாயத்தினரும் சிரிக்கும் அளவிற்கு உச்சகட்டத்தை அடைந்ததும் விளித்தெலுந்து பிரச்னையை தீர்க்க கமிட்டி அமைத்த தங்கள் முயற்சி தாமதித்து எடுக்கப்பட்டிருந்தாலும் பாராட்டிற்குரியாதே

எமது நீண்டகால பிராத்தனையை நிறைவேற்றிய ஏக இறைவனுக்கு  ...நன்றி.


இஸ்லாமிய பாரம்பரிய நீதிமன்றம் அமைப்பது சம்பந்தமான பொது விவாதங்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்

hptt://islamictraditionalcourt.blogspot.com.
hptt://hajishemd.blogspot.com.

எமது வேண்டுகோள்:

  பெரியகுளம் S.K.K. இப்ராகிம்-Ex.M.L.A., K.M.M.மேத்தர்  வழக்கை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள கமிட்டியிடம் எமக்கும் சகாபுதீனுக்கும் நடக்கும் வழக்கை சமர்பிக்க விரும்புகின்றேன். கட்டுரையில் கண்ட வழிமுறையை.- பின்பற்றி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினால்,
அரசும் இஸ்லாமும் அங்கீகரிக்கதக்க பிணக்குகளை   தீர்த்துவைக்கும் / நீதிவழங்கும் ஓர் இஸ்லாமிய அமைப்பு உருவாவதற்க்கான சூழல் உருவாகிவிடும். என உறுதிபட நன்புகின்றேன்..எனவே எனது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இப்படிக்கு தங்கள்பணிவுள்ள.


எஸ்.முஹம்மது.

இணைப்பு : 17/10/2009.ம் தேதி தேனி ஐக்கிய ஜமாத்திற்கு கொடுத்த மனுவின் நகல்.
            2/10/2010 ம் தேதி பெரியாகும் டவுன் தலைவருக்கு கொடுத்த மனுவின் நகல். 
                  
                        
பின்குறிப்பு:
தேனி மாவட்டத்தில் நான் அறிந்த 100 இஸ்லாமிய குடும்பங்கள் என்ற தலைப்பில்,
hptt://hajishemd-100islamicfamilis.blogspot.com. என்ற இணைய தளத்தில் தொகுக்கவுள்ளேன். விருப்பமுள்ளோர் இத்துடன் இணைந்துள்ள படிவத்தை பூர்த்திசெய்து எனது விலாசத்திற்கு அனுப்பவும்.




3/3/2011.

நேற்று கமிட்டி மெம்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
கமிட்டி ஒரு கண்துடைப்புக்காக போடப்பட்டதுஎன்றார்.

 உண்மையில் மிகவும் குழம்பிவிட்டேன்.

காலம் எப்படி,எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது..?
எனது கற்பனையிலுள்ள தலைவர்கலை எங்கு தேடுவேன்.
சராசரி அரசியல்வாதிகளிக்கும் இந்த இஸ்லாமிய தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்...?

ஒரு வகையில் அவர்கள் நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் அறிவாளிகள்.... நான்தான்...கற்பனை உலகில் வாழுகிறேன்..நான் நானாக வாழ அருள் புரிவாய் இறைவா..!



http://www.hajishemd.com/

hajishemd.blogsplot.com




Comments

Popular posts from this blog

Khilafat at Periyakulam Explanation.

யாரிடம் புகார் அளிப்பது???

ஜமாத் தலைவர்களுக்கு .மடல் -1.